கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் குடிநீர் குழாய்களை உடைத்த நபரைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் இரண்டாயிரத்து 500 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொது மக்களின் குடிநீர் தேவைக்காக, அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீரும், அத்தியாவசியத் தேவைகளுக்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர், குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

கோதவாடி ஊராட்சியில் மொத்தம் 239 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக கோதவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை சுமார் ஐந்து இடங்களில் குடிநீர் குழாயை யாரோ சில மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் குத்தி சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றனர்.
இந்தநிலையில், கோதவாடி ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி சமூக வலைதளம் மூலம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
'கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் கோதவாடி ஊராட்சியில் உள்ள பகுதியில் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி வரும் சமூக விரோதிகளை ஊராட்சி மன்றத்திற்கு தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். கோதவாடி ஊராட்சிக்கு சொந்தமான பொருள்களையோ, உடமைகளையோ சேதப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்' என தெரிவித்துள்ளார்.