வால்பாறையில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்..!

கோவை: வால்பாறை நகராட்சி பகுதிகளின் குப்பைக் கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதோடு தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.


கோவை: வால்பாறை நகராட்சி பகுதிகளின் குப்பைக் கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதோடு தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிறிய பெரிய கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள் உள்ளன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வால்பாறையின் மத்தியில் புதிய மார்க்கெட் பகுதிகள் உள்ளன. இந்தநிலையில், இங்கு சேகரமாகும் கழிவுகள் மற்றும் குப்பைகள், கோழி, மீன், இறைச்சி கழிவுகள் நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு வாகனம் மூலம் ஸ்டான்மோர் பகுதியிலுள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வந்தன.



இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வால்பாறையில் சேகரமாகும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த சாலை வழியாக ஸ்டான் மோர், குரங்கு முடி, பழைய வால்பாறை, வில்லோனி, உருளிக்கல், சோலையார் அணை மற்றும் கேரளா செல்கிறது. இந்தக் குப்பைக் கிடங்கு அருகிலேயே வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி, நீதிமன்றம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், சாலை ஓரத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பையோடு வரும் மாமிசக் கழிவுகளால் சிறுத்தைகள் மற்றும் செந்நாய்கள் இப்பகுதிக்கு வருகின்றன. இது மனிதனைத் தாக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...