ஆடி அமாவாசை: பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில்.

ஆடி அமாவாசையான இன்று, உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு அருள்பாலித்தனர்.



திருப்பூர்: ஆடி அமாவாசையான இன்று, உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு அருள்பாலித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள மிகப்பழைமையான அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆடிப்பட்ட சாகுபடியை துவங்கும் விவசாயிகள், பயிர் செழிக்கவும், கால்நடை வளம் பெருக வேண்டியும் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.

மேலும், உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து 100க் கணக்கான ரேக்ளா மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்கள் முன்னோர்களை நினைவு கூரும்வகையில், அவர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் கோவில்களுக்கு ஆடி அமவாசையான இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடி அமாவாசையை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர், மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.





Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...