கலைஞர் நினைவு நாள்: தமிழ்நாட்டை உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு கொண்டு சேர்த்த ஆளுமை தான் கலைஞர் -  கார்த்திகேய சிவசேனாபதி

கோவை: கலைஞர் நினைவு நாள்: திமுக சுற்றுச்சூழல் அணி அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



தமிழ்நாடு எனும் மாநிலத்தை உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு கொண்டு சேர்த்த ஆளுமை தான் தலைவர் கலைஞர் - கார்த்திகேய சிவசேனாபதி.



காங்கேயம்: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த மு. கருணாநிதி அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, காங்கயத்தில் உள்ள திமுக சுற்றுச்சூழல் அணி தலைமை அலுவலகத்தில், அமைப்பின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு, கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தனது இளமைக்காலம் தொடங்கி, தனது இறுதி மூச்சு வரை தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஓய்வின்றி உழைத்த ஓர் உன்னத மனிதர் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழ் சமூகத்தின் வரலாற்றில் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி குறித்து பேசும் போதெல்லாம், அதை நிர்வாக ரீதியில் மக்களிடையே கொண்டு சேர்த்திட்ட தலைவர் கலைஞரின் பெயர் இல்லாமல் அவை முழுமை பெறாது.

எண்ணற்றத் திட்டங்களாலும், வளர்ச்சி என்னும் நிலையை அடையக்கூடிய தொலைநோக்கு பார்வையாலும், தமிழ்நாடு எனும் மாநிலத்தை உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு கொண்டு சேர்த்த ஆளுமை தான் தலைவர் கலைஞர். அதே நேரம், அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் தலைவராக இருந்து, உடன்பிறப்புகளை கட்டுக்கோப்பாகவும், கொள்கை சார்ந்தவர்களாகவும் வளர்த்தெடுத்தவர்.

அவரது நினைவுநாளான, இன்று தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கும், கழகத்திற்கும் ஆற்றிய அரும்பணியை எண்ணி பெருமை கொள்வோம். அதை நாள்தோறும் மக்களிடையே கொண்டு சென்று அவர் பெருமையை உலகறியச் செய்வோம்",இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



விழாவில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...