இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 36,000 க்கு விற்பனை; ஒரே நாளில் ரூ.624 குறைந்தது.

கோவை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை. ஒரே நாளில் 624 ரூபாய் குறைந்தது.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய். 36,000 மாக குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் தங்க நகைகளை வாங்கவிரும்புவர்கள் இந்த விலை குறைப்பை பயன்படுத்திக் சொல்லலாம் என, கோவை தங்க நகைதயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நகை விற்பனை பெரும் தடையை சந்தித்த போதும், தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. உலக மார்க்கெட்டில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே, விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்பட்டது. 

கடந்த இரண்டு மாதங்களாக, 38 ஆயிரம் ரூபாய் முதல் 37 ஆயிரம் ரூபாய் வரை என ஏற்ற, இறக்கம் கொண்டு காணப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாககுறையத் துவங்கியது. அதன்படி, 

நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் 624 ரூபாய் குறைந்தது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது, 

"அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், அமெரிக்க நாட்டு கரன்சி மீதான பத்திரங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். மீண்டும் தங்கத்தின் விலை உயரும்.எனவே, தங்க நகைகள் வாங்க விரும்புவர்கள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் தற்போது விலை குறைந்து வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.", என்றார். 

கோவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக விற்கப்பட்ட ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை விபரம்:

August 3 : Rs 37,064

August 4:Rs 37,048

August 5:Rs 37,040

August 6:Rs 36,816

August 7( இன்று) :Rs 36,192

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...