கோவை: கிணத்துக்கடவில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு மது விற்பனை செய்தவரை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் கைது செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி பகுதியில் இன்று காலை கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, கொண்டம்பட்டி பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன்(50) என்பதும், இவர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், விசுவநாதனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.