கோவை: திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று, கிணத்துக்கடவில் கலைஞரின் உருவப்படத்திற்கு பூமாலை சூடி திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
அதன்படி இன்று, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் திமுக சார்பில் கலைஞர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு பேரூராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினருமான கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நினைவுநாளில் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு அஞ்சலியும் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்ப்பித்தன், கணேஷ், லட்சுமணன், மணிகண்டன், பாலாஜி, ஈஸ்வரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.