கோவை: கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினர் சார்பில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தபட்டு வருகிறது.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுபாளையம் ஊராட்சியில் காவல் துறையினர் சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, தலைமை காவலர் சுரேஷ், பெண் காவலர் பவதாரணி ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவத் தொடங்குவதால், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் குடியிருந்தாலும், நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் பெண் குழந்தைகளைக் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தும் போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாதவர்கள் தொடர்பு கொண்டால், நிராகரிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு கூட்டத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.