கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலசிலை அமைத்து 3ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மார்பளவில் வெண்கலசிலை அமைக்க நல்லட்டிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகா குமரேசன் மற்றும் திமுக கிளை செயலாளர் குமரேசன் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், ஏற்கனவே 20 கிலோ எடை கொண்ட வெண்கலத்தினால் ஆன கலைஞர் கருணாநிதி சிலை வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.

தற்போது கருணாநிதி சிலை வைப்பதற்கான அனுமதி இன்னும் கிடைக்காததால் இன்று ஊராட்சி மன்ற தலைவர் தாமரைக்குளத்தில் அவரது வீட்டில் முன்னாள் முதலமைச்சரின் வெண்கலத்தினால் ஆன கருணாநிதி சிலைக்கு ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகா குமரேசன் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருப்புசாமி, செந்தில், ரமேஷ், லட்சுமணன் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.