கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகின்ற நிலையில், மூன்றாவது அலை தாக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இணைந்து பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்கள் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்வது, தெருக்களில் சென்று மருந்து தெளிப்பது, துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது. ஆக்சிஜன் அளவை மக்களிடம் கணக்கிடுவது என பல்வேறு விதமான சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சிறு சிறு பேருந்து நிலையங்களில் டென்ட் அமைத்து கபசுரக் குடிநீர் வழங்கி, ஆக்ஸிஜன் அளவு பார்க்கப்பட்டு, அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கணபதி 3-ஆம் நம்பர் பேருந்து நிலையம் வாசலில் சாமியான பந்தல் அமைத்து மாநகராட்சி பணியாளர்கள் காலை முதல் மாலை வரை கபசுரக் குடிநீர், பொது மக்களுக்கு வழங்கினர். மக்களுக்கு சத்து மாத்திரைகள் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் வழங்கினர். சளி மற்றும் காய்ச்சலின் அளவு பார்க்கப்பட்டது. இதுபோன்ற செயலால் வெளியூர்களுக்கு செல்லக் கூடிய ஊர்களுக்கு செல்லக் கூடிய மக்களுக்கு இது பெரும் உதவியாக இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.