கோவை கணபதியில் கலைஞர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் 1000 பேருக்கு அன்னதானம்!

கோவை: கோவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 46பகுதி கழகம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 46பகுதி கழகம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை கணபதி பகுதி 46 -வது திமுக கழகம் சார்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 3 -ம் நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோவில் பின்புறம் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் சாந்தி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத் குமார் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேஷ், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ், பிரதிநிதி தனியேவேல், மாணவரணி தர்மா மற்றும் கட்சி நிர்வாகிகள் சுபாஷ், ஸ்டீபன்ராஜ், சதீஷ்குமார், கணபதி கார்த்தி, ஆர்.டி.ஆர்.கார்த்தி, பால்வின்சென்ட், கணபதி சசிதரன், சசிகுமார், மணிகண்டன், மாதேஸ்வரன், ராஜன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அதேபோல, மாலை திமுகவினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...