கோவை: கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு சேலத்தில் இருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், சேலம் பேப்பர் கடைக்காரரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சேலத்தில் இருந்து கோவை கலெக்டர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்ட கலெக்டராக இருப்பவர் சமீரன். நேற்று இவரது செல்போனுக்கு பேசிய ஆசாமி அவருக்கு கடும் வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமி எந்த ஊர் என நடத்திய விசாரணையில், சேலத்திலிருந்து பேசி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் சைபர் கிரைம் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு களத்தில் இறங்கினர்.
மிரட்டல் விடுத்த செல்போனுக்கு சொந்தக்காரர் இரும்பாலை பக்கமுள்ள சிற்றனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர் பழைய பேப்பர் வாங்கும் கடை வைத்துள்ளார். அவரைப் பிடித்து விசாரித்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் வைத்திருந்த செல்போனை யாரோ திருடிச் சென்று விட்டனர் என கூறினார்.
கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமி சிற்றூரில் இருந்து குரங்குசாவடி வரை வந்துள்ளான். அவன் 20 பேருக்கு செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளான். கிருஷ்ணனின் செல்போனை திருடியது யார்? அப்படியே யாராவது எடுத்துச் சென்றால்கூட கோவை கலெக்டரின் செல் நம்பர் எண்ணை கண்டுபிடித்து மிரட்டல் விடுக்கக் காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கோவை போலீஸார் மற்றும் சேலம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுக்கும் போது சலசலப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த மிரட்டல் இருக்குமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.