கோவை: வால்பாறையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை திமுகவினர் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அனுசரித்தனர்.

திமுகழக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நினைவு நாளை அனுசரிக்கும் வண்ணம் கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை முன்பு கலைஞரின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து பூத்தூவி அனுசரித்தனர்.
இதில், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு பூத்தூவி வணங்கினார்.

வால்பாறை பொறுப்பாளர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், ஜே.பி.ஆர்., செந்தில், மகுடீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, கடை குட்டி மற்றும் பொள்ளாச்சி பகுதி ஒன்றிய செயலாளர்கள் ஒட்டப்பட்டி கிரி, துரை, அய்யம்பாளையம் ராஜ், திம்பம்குத்து சக்திவேல், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சேனாதிபதி, தனபால் கிருஷ்ணன், காமராஜ், கண்ணன் மற்றும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.