கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி அதிகாரி என கூறி மாஸ்க் அணியாதவர்களிடம் பணம் பறித்த மர்ம ஆசாமியை பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் 3 பேருந்து நிலையங்கள் உள்ளது. எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள் கடந்த 3 நாள்களாக டிப்டாப் ஆசாமி ஒருவர், மாஸ்க் போடாத பொதுமக்கள், சனிடைசர் பயன்படுத்தாத நடைபாதை கடை உரிமையாளர்களிடம், நான் மாநகராட்சி அதிகாரி என கூறி பணம் பறித்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அவரை விரட்டி அடித்தனர்.
பின்னர், இரண்டாவது நாளாக அந்த ஆசாமி கண்ணில் படவே அங்கு வந்த ஒரு காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்பொழுது கண்ணில் தென்பட்ட அந்த மர்ம ஆசாமியை ஒரு நடைபாதை வியாபாரிகள் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்தனர். அப்போது, அங்கு வந்த காவலர் விசாரணை செய்தபோது, அவருடைய அடையாள அட்டையில் சிவகங்கை இளையான்குடி என பதிவு செய்யப்பட்டிருந்தது.
போலீசில் ஒப்படைக்கப் போவதாக கூறியவுடன் மர்ம ஆசாமி ஓட்டம் பிடித்தான். பொதுமக்கள் அவரை அடித்து விரட்டினர். அதனால் யாராவது மாநகராட்சி அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் என பைன் கேட்டால் முழுமையாக அவரிடம் விசாரணை செய்யும்படி காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.