மக்களைத் தேடி முதல்வரின் மருத்துவ திட்டம்: கோவையில் ஒரே நாளில் 544 பேர் பயன் - அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவையில் மக்களைத் தேடி முதல்வரின் மருத்துவ திட்டத்தில் ஒரே நாளில் 544 பேர் பயன் அடைந்துள்ளதாக அதிகாரிகள் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் மக்களைத் தேடி முதல்வரின் மருத்துவ திட்டத்தில் ஒரே நாளில் 544 பேர் பயன் அடைந்துள்ளதாக அதிகாரிகள் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவ திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைத்தார். தொடர்ந்து வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் திட்டமாகும்.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே கோவையில் 544 பேர் ஒரே நாளில் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நோயாளிகள் கண்காணிப்பு அதிகாரிகள் கூறும்போது -

பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருந்து பொருட்கள் வினியோகம், பிசியோதெரபி சிகிச்சை, மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது என 3 விதமாக செயல்படுகிறது.

இதற்கென 90 பெண் சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிரமப்படுவதை தடுக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...