கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் போதைப்பொருள், செல்போன் உள்ளதா? - போலீசார் திடீர் சோதனை!

கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் போதைப்பொருள், செல்போன் உள்ளதா? என போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.


கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் போதைப்பொருள், செல்போன் உள்ளதா? என போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தாராளமாக செல்போன் பயன்படுத்துவதாகவும் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலும் மாநகர் காவல்துறை ஆணையர் தீபக் தாேமார் உத்தரவின் பேரில், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் தலைமையில் 100 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 6 மணி முதல் 8 மணி வரை நடந்தது.

அப்போது, அவர்கள் செல்போன், போதைப்பொருட்கள். உள்ளதா? என்பது குறித்து கைதிகள் அறை, கழிவறை, உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால், அவ்வாறு எதுவும் சிக்கவில்லை கைதிகள் சட்டவிரோதமாக செல்போன் மூலம் வெளியிடங்களுக்கு பேசி வருகிறார்களா? எனவும் சோதனை நடத்தப்பட்டது. அதிலும் செல்போன்கள் எதுவும் சிக்கவில்லை.

போலீசாரின் இந்த சோதனையால் சிறைக்கைதிகள் இடையே பரபரப்பு நிலவியது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...