இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு: 5வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவை: இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக 5 -வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக 5 -வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். கடந்த 2016-ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முகமது ரபிக் ஹாசன் ஓமனில் தலைமறைவாக இருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் இருந்து டெல்லிக்கு வந்த முகமது ரபிக் ஹாஸனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், 5-வதாக கைதான முகமது ரபிக் ஹசன் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...