கோவை அன்னூர் ஒன்றியத்தில் மனுதாரர் காலில் விழும் தண்டல்காரர்..! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

கோவை: கோவை அன்னூர் ஒன்றியம் ஒற்றர் பாளையத்தில் தண்டல் காரராக பணிபுரியும் முத்துசாமி என்பவர் விஏஓ அலுவலகத்திலேயே மனுதாரர் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அன்னூர் ஒன்றியம் ஒற்றர் பாளையத்தில் தண்டல் காரராக பணிபுரியும் முத்துசாமி என்பவர் விஏஓ அலுவலகத்திலேயே மனுதாரர் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் ஒற்றர் பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே அலுவலகத்தில் முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது சொத்து விபரங்களை சரிபார்ப்பு விஷயங்களுக்காக விஏஓ அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி, கோபிநாத் ஆவணங்களில் சரியான ஆவணங்கள் இல்லை என்றும் முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

அப்போது, கோபிநாத் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தண்டல்காரர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி சமாதானப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்.

இதையடுத்து, கோபிநாத் முத்துசாமியை திட்டியதோடு புகார் அளித்து பணியலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.



இதையடுத்து தண்டல்காரர் முத்துசாமி, கோபிநாத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதை அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார்.

முத்துசாமி விஏஓ அலுவலகத்தில் விஏஓ கலைச்செல்வி முன்னிலையில் காலில் விழுந்து கதறும் காட்சி கோவையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...