திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் சிவசேனாதிபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை அவரவர் வீடுகளில் எளிய முறையில் அனுசரிக்க வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற சவாலை சந்தித்து வருவதாகவும் தலைவர் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பரவலை கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

அதேசமயம், பொதுமக்களில் சிலர் அலட்சியம் காட்டி வருவதாகவும், அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்காமல் ஏதோ அரசு சொல்கிறது என்று அஜாக்கிரதையாக இந்த நோயை கையாலும் சூழல் நிலவி வருகிறது. இதனால் சில பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வில்லை என்றார்.
எனவே, ஒவ்வொருவரும் அதற்கான முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம், தொற்று நோயை முழுமையாக ஒழிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்தினார்.