காதல் மனைவிக்கு வரதட்சணை கொடுமை... விவாகரத்து கேட்டதால் சரமாரி தாக்கு.. ஊதாரி கணவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை: வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய கணவன் மற்றும் அவரது உறவினரை காவல்துறை வலைவீசித் தேடி வருகின்றனர்.



கோவை: வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய கணவன் மற்றும் அவரது உறவினரை காவல்துறை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, சரவணம்பட்டி அடுத்த எல்.ஜி.பி நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் லலிதா (31). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மணிவண்ணன் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். லலிதா சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அந்த சமயத்தில் மணிவண்ணன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் சொந்தமாகத் தொழில் செய்வதாகக் கூறி லலிதாவின் தந்தை ஆறுமுகத்திடம் இரண்டு லட்ச ரூபாயைப் பணமாக வாங்கியிருந்தார். தொடர்ந்து பணம் கேட்டு லலிதாவையும் அவரது குழந்தையையும் மணிவண்ணன் அடித்து உதைத்துள்ளார்.

இதை அடுத்து லலிதா அங்கிருந்து குழந்தையோடு புறப்பட்டு கோவையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். மேலும் விவாகரத்து கேட்டு லலிதா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள லலிதாவின் வீட்டிற்கு வந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் லலிதா, அவரது குழந்தை, லலிதாவின் குடும்பத்தாரைத் தாக்கத் தொடங்கினர்.

இதில் காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து லலிதா சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை மணிவண்ணன் உட்பட 2 பேரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...