கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் காவல் துறை சார்பாக போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பிடிப்பதற்காக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக, தினந்தோறும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து நடைபெறும் கஞ்சா விற்பனை கோவையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, சிங்காநல்லூர் பகுதியில், போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு கஞ்சா ஆசாமி சிக்கினார். அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சிங்காநல்லூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, எஸ்.ஐ.எஸ்.எஸ். காலனி பகுதி பஸ் ஸ்டாப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில், அவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அந்த வாலிபரை போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஸப் என்பவரின் மகன் எடின் (17) என்பது தெரியவந்தது. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அவரிடமிருந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கோவை சிறையில் அடைத்தனர்.