கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்கள் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.42க்குட்பட்ட உடையாம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளார்களிடம் ஆணையாளர் அவர்கள் தெரிவிக்கையில்,
முன் களப்பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும் போது, தொழிற்சாலைகளில் தங்கி பணிபுரியும் பணியாளர்களுக்கும் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்தினறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, ஆகிய பணிகளை கண்டறிய வேண்டும் என்றார்.
மேலும், அதன் விபரங்களை கோவிட்-19 கள ஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்தபின், அவற்றில் சளி, காய்ச்சல் உள்ளவர்களை கண்டறியப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களைக் குறித்த தகவல்களை உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும் சுகாதார அலுவலா்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவற்றை பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும். பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்காகவும், கொசுக்கள் உருவாகாமல் இருப்பதற்காகவும் வீடுகளில் தேவையற்ற பொருட்களை அகற்றிட வேண்டும் என தெரிவிக்க வேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய்களைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, வடக்கு மண்டலம் வாடு எண்.42க்குட்பட்ட சீனிவாசா நகர் பகுதியில் அமைந்துள்ள அம்ரூட் பூங்காவினை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், பூங்காவின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்களிடம் பூங்காவிற்குள் நடைபாதைக்கு வருபவர்களை நுழைவுவாயில் வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை கண்டறிய வேண்டும். கைகளை சுத்தப்படுத்திட நுழைவுவாயிலில் கிருமிநாசினி வைத்திட வேண்டும். பதிவேடுகளில் அவர்களது பெயர்களை குறிப்பிட வேண்டும்.

பூங்காவின் உட்புற மற்றும் சுற்றுப்புறத்தினை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறும், அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகன சுந்தரி, செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார ஆய்வாளர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.