கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழக- கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர், ரங்கேகவுண்டனூர், சின்னாகவுண்டனூர் ஆகிய சோதனைச்சாவடியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் திடீரென சோதனை சாவடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட பொள்ளாச்சி சார் ஆட்சியர், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சோதனை செய்வதோடு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், மண்டல துணை தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.