கோவை செட்டிபாளையம் அருகே 60 அடி கிணற்றில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..! பொதுமக்கள் பாராட்டு!

கோவை: கோவை அருகே செட்டிபாளையத்தில் 60 அடி கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.


கோவை: கோவை அருகே செட்டிபாளையத்தில் 60 அடி கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

கோவை அருகே உள்ள செட்டிபாளையம், சின்னையன் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் பத்திரகாளிமுத்து (38). இவர் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள கிணற்று சுவர் மீது ஏறி உட்கார்ந்துள்ளார்.

அப்போது, திடீரென நிலைதடுமாறி பத்தரகாளிமுத்து 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதனை கண்ட வீட்டில் இருந்த குடும்பத்தினர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்திரகாளிமுத்துவை கயிறு மூலம் மீட்க முயன்றனர்.

ஆனால், மீட்க முடியாததால் தண்ணீரில் மூழ்காமல் இருக்க கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிணத்துகடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் செட்டிபாளையம் சென்று கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்திரகாளி முத்துவை கயிறு கட்டி லாவகமாக கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த பத்ரகாளி முத்துக்கு கை, காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பத்திரகாளி முத்துவை தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தண்ணீரில் தத்தளித்த நபரை மீட்ட கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...