பொள்ளாச்சி - உடுமலை ரோடு சின்னாம்பாளையம் பகுதியில் அடுத்தடுத்த 3 கடைகளின் பணம் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை: பொள்ளாச்சி - உடுமலை ரோடு சின்னாம்பாளையம் பகுதியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று கடைகளின் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி - உடுமலை ரோடு சின்னாம்பாளையம் பகுதியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று கடைகளின் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியில் உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வணிக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாபாரிகள் நேற்று இரவு வழக்கம்போல கடைகளை அடைத்து விட்டு, சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க வரும்போது. அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், வைசாகர் என்பவரின் கூலிங் சீட் விற்பணை கடையில் இருந்து ரூ.5 ஆயிரம், யாசின் என்பவரின் சூப் விற்பணை கடையில் இருந்து ரூ.12 ஆயிரம், குமார் என்பவரின் மளிகை கடையில் இருந்து ரூ.2000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரை, மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் மக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...