கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரத்த நாள கட்டி நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு, சவாலான அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அப்பகுதியில் செக்கூரிட்டியாக வேலை செய்து வருகிறார். அவருக்கு வயிற்றின் இடது பக்கத்தின் கீழ்ப்பகுதியில் கட்டி ஏற்பட்டு நடந்த நான்கு வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.
கடந்த ஒரு வருடமாக, கட்டியின் வீக்கம் அதிகமாகவே, கொரோனா பரவலின் காரணமாக வீட்டைவிட்டு மற்றும் செல்லாமலும், மருத்துவமனையை அணுகாமலும் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த ஜூலை மாதம் கொரோனா பரவல் வெகுவாக குறையவே அவர் அரசு கோவை மருத்துவக்கல்லூரி இரத்த நாள அறுவைச் சிகிச்சைப் பிரிவை அணுகினார்.
அப்போது அவருக்குக் குடலிறக்கத்திற்காக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்குக் கீழே 18X10 செ.மீ அளவிலான இரத்த நாள கட்டி இருந்ததும் அது வெடிக்கும் தறுவாயில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
உடனடியாக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டு ரத்தநாள கட்டியின் தன்மை அறியப்பட்டது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவருக்குக் கடந்த மாதம் ஜூலை 22ம் தேதி இரத்த நாள கட்டியின் மேலும், கீழும் உள்ள இரத்த நாளங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
பின்னர் 18X10 செ.மீ அளவிலான இரத்த நாளங்கள் கட்டுப்பாட்டில் பொறுமையாகவும், மிகவும் துல்லிய முறையிலும் வயிற்றின் குடல் பகுதியிலிருந்து தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
பின்னர் அவரின் இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு எல்லாம் ஒரு சீராக வந்த பின்னர் அந்த இரத்த நாள கட்டி மிகவும் கவனமாக அறுவைச்சிகிச்சை செய்து அதனுள் இருந்த 500 கிராம் உறைந்த இரத்தத்துடன் முழுமையாக அகற்றப்பட்டு இரத்த நாளங்கள் சரி செய்யப்பட்டது.
இந்த அறுவைச் சிகிச்சை 5 மணிநேரம் செய்யப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையில் அவருக்கு 2 பாட்டில் இரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

இந்த அரிதான அறுவைச்சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டால் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும். ஆனால் இந்த அறுவைச் சிகிச்சை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.க்.நிர்மலா M.S.DGO., மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேரா.மரு.S.சடகோபன் MD.,ஆகியோரின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலால், இரத்த நாள துறைத் தலைவர் பேரா.ராஜேஷ் தலைமையில் உடன் இரத்த நாள அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் மரு.ப.வடிவேலு மற்றும் பா.தீபன்குமார் மற்றும் மயக்க நிபுணர் பேரா.கல்யாணசுந்தரம், பேரா.கனகராஜ் தலைமையில் மருத்துவர் விக்னேஷ் உடன் 'வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.
இந்த அறுவைச்சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.