திருப்பூர்: திருப்பூரில் நொய்யல் சீரமைப்பு பணிகள் குறித்து தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

திருப்பூரில் நொய்யல் ஆறு, மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், நீர் சுத்திகரிப்பு, தடுப்பணை, பூங்கா என முழுமையாக அழகுபடுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
நகர பகுதியில், நொய்யல் ஆறு ஆறு கி.மீ., தூரத்துக்கு அமைந்துள்ளது. ஆற்றின் இரண்டு புறமும், 60 இடங்களில், மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், ஆற்றில் நேரடியாக கழிவு நீர் கலக்கப்படுகிறது. இரண்டு கரைகளிலும், கான்கிரீட் அமைத்து, இரண்டு புறமும் கழிவு நீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்படுகிறது. கழிவு நீர் முழுவதும் சேகரிக்கப்பட்டு, அணைப்பாளையம் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, நீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது. நகர பகுதியில் எங்குமே, நேரடியாக ஆற்றில் கழிவு நீர் கலக்காதவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் வகையில், நான்கு இடங்களில், தடுப்பணைகள் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் ஆறு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் ஆறு உள்ளது. இதனை விரைவில் சீர்படுத்தி அழகான, கழிவுநீர் கலக்காத ஆறாக மாற்றுவோம். மேலும் இதனையொட்டி உள்ள சாலைகளை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு கரைகளிலும் ரோடு, நடைபாதை, 'சைக்கிளிங்' வழித்தடம், மரங்கள், அழகான மலர்களுடன் கூடிய செடிகளும் அமைக்கப்படுகின்றன. பெரிய அளவிலான பூங்கா, ராட்டினங்களுடன் கூடிய விளையாட்டு பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியனவும் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.