உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக கோவை வரும் குடியரசு தலைவர்..! பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கோவை: உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக கோவை வந்து டெல்லி செல்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.


கோவை: உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக கோவை வந்து டெல்லி செல்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் வந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்வதாக இருந்தது.

இந்நிலையில், ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி குடியரசுத் தலைவர் வந்து கொண்டுள்ளார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 2ம் தேதி சென்னை வந்தார். அன்று மாலை தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை சட்டசபையில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, அவர் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், வெலிங்டன் பயிற்சி மையத்திற்குச் சென்று தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று காலை டெல்லி திரும்புவதாக இருந்தது.

இந்த நிலையில், ஊட்டி ராணுவ பயிற்சி மையமான வெலிங்டன் மைதானத்தில் ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக அவர் கோவையை நோக்கி வந்து கொண்டு உள்ளார். அவர் சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளார்.



இந்த நிலையில், திடீரென அவர் சாலை மார்க்கமாக வருவதால், சூலூரில் இருந்து ஊட்டி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது:- அவருடைய கார் மிகவும் மெதுவாகத்தான் கோவை நோக்கி வந்து கொண்டுள்ளது. அவர் எத்தனை மணிக்கு சூலூரை அடைகிறாரோ அதன் பிறகு அவர் சூலூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய நேரம் நமக்கு தெரியவரும் என்று குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...