கொரோனா கட்டுப்பாடு: பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால், பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால், பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும், உள்ளூர் வியாபாரிகளும் சந்தைக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து அதிகப்படியாக கேரளாவுக்கு மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாடு வரத்து அதிகரிப்பால், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் கோவை மாவட்டம் முழுவதும், கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி மாட்டு சந்தையை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனால் மாட்டு சந்தை மாடுகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்த பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கும் வரை, பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...