கோவை: பொள்ளாச்சி சேரன்நகர் கோயிலில் 2 சவரன் நகை திருட்டு போனதையடுத்து அடுத்த, மூன்று கடைகளிலும் திருட முயற்சி செய்யப்பட்டதால் மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி கோவை ரோடு சேரன்நகர் நுழைவாயிலில் உள்ள விநாயகர் கோயிலில், நேற்று தரிசனத்திற்கு சென்ற பொதுமக்கள், விநாயகர் கோவிலின் ஒரு பகுதியில் உள்ள அம்மன் சன்னிதானத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அங்கிருந்த தங்க நகைகளும் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கோவில் சன்னிதானம் மற்றும் கோயிலை ஒட்டியுள்ள அடுத்தடுத்து 3 கடைகளில் நேற்று முன்தினம் இரவு திருட்டு முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.

மேலும், கோயிலில் உள்ள அம்மன் சன்னிதானத்தில் இருந்து 2 சவரன் நகைகள் திருட்டு போனதும், கடைகளின் ஷட்டர்கள் உடைக்க முடியாததால் கடைகளில் திருட்டு நடைபெறவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார், தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.