இந்தியாவில் முதல் முறை- 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம்: கோவையில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றுக்குத் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது.



இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, கோவை நஞ்சுண்டா புரத்தில், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தினை துவக்கி வைத்தார்.



இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக மாவட்ட தொற்றா நோயாளிகளின் கண்காணிப்பு அலுவலா் கே.விஜயகுமார் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 75 ஆயிரம் போ் அரசு மருத்துவமனைகள் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெற்று வருகின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று மருந்துகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெறுபவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்குவதற்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.



இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர். இத்திட்டம் கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் திட்டத்துக்கான வாகனங்களை முதல்வா் தொடங்கிவைக்கிறாா்.

மாநகராட்சியில் நஞ்சுண்டா புரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்தும், ஊரகப் பகுதியில் ஆனைமலை வட்டாரம், ஆழியாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்தும் வாகனங்கள் இயங்கும்.

நோயாளிக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும். அதனுடன் எந்தெந்த மருந்துகளை எந்த வேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகட்டி அட்டையும் வைக்கப்பட்டிருக்கும்.

இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்து மீண்டும் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்றார்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...