கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக்கு மண்டலங்களில் மட்டும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுப்புழு உற்பத்தியாகக்கூடிய பயன்படுத்தப்படாத பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள், காலியிடங்கள், தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 20 வார்டுகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர். டயர், தேங்காய் தொட்டி, பெயிண்ட் டப்பா, தர்மாகோல், ஆட்டுக்கல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டிரம், உணவு பார்சல் கண்டைனர், பூந்தொட்டி, பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் பீங்கான் பொருட்கள் போன்ற கொசுப்புழுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சுமார் 2 லட்சம் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 20 வார்டு பகுதிகளிலும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய 1,53,452 பயன்படுத்தப்படாத பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் மொத்தம் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இரு மண்டலங்களில் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது, குடியிருப்பாளர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நீர் தேங்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம், பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்துதல் மற்றும் வீடுகளைச் சுற்றி சுகாதாரத்தை பேணுதல் குறித்து பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

மாநகராட்சி அதிகாரிகள், இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றும், டெங்கு நோய் பரவலைத் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். பொதுமக்களும் மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...