கிணத்துக்கடவில் புதருக்குள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை... 49 மது பாட்டில்கள் பறிமுதல்!

கோவை: கிணத்துக்கடவில் புதருக்குள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு, 49 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கிணத்துக்கடவில் புதருக்குள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு, 49 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றிரவு கிணத்துக்கடவு காவல்துறை டாஸ்மாக் மதுபான கடை அருகே சென்று கண்காணித்த போது அங்கு புதருக்குள் வைத்து ஒரு நபர் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, காவல்துறை அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அந்த வாலிபர் கார்த்தி வயது (40) என்பதும் இவர் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்து அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...