வால்பாறையில் 'மக்களைத் தேடி மருத்துவம்' - புதிய திட்டம் இன்று தொடக்கம்!

கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வால்பாறையில் துவங்கப்பட்டது.


கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வால்பாறையில் துவங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்று வால்பாறையில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் வெள்ளி முடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் இன்று துவக்கி வைக்கப்பட்டது.



மேலும் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இன்று இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. ஆரோக்கிய திட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர் மூலம் மருந்துகள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் அறிவித்துள்ளார்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...