கோவை: இந்தியாவில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' சார்பில், 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' கோவை விமான நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7-மாவட்ட மக்களுக்குப் பயனளித்து வருகிறது. ஏர்போர்ட் வளாகத்தில் அமைந்துள்ள ஏர் கார்கோ அலுவலகத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு வகையான கார்கோ புக்கிங் செய்யப்பட்டு விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோவையிலிருந்து உள்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விமானச் சேவை உள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில், இலங்கை, சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டுமே விமான சர்வீஸ் உள்ளது.
இதுபோன்று வெளிநாடுகளுக்கு அதிக சர்வீஸ் இல்லாத விமான நிலையங்களில் 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி கோவையிலிருந்து பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு டிரக் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தற்போது இந்தியாவில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' நிறுவனம் சார்பில் கோவை 'ஏர் கார்கோ' வளாகத்தில் பிரத்தியேக 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏர் இந்தியா ஏரியா மார்க்கெட்டிங் மேலாளர் கிரிஜா கோவை ஏர் கார்கோ உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த சர்வீஸ் துவக்கப்பட்ட காரணத்தால் கோவையில் இருந்து ஏற்றுமதி பொருட்கள் கொச்சின், பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ட்ரக் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 'ஏர் இந்தியா' சார்பில் பல்வேறு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். 'ஏர் இந்தியா'வின் முயற்சி கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த பயன் தரும்.
கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தனியார் நிறுவனம் சார்பில், பாண்டட் ட்ரக்கிங் சர்வீஸ் அமலில் உள்ள நிலையில், தற்போது முதல்முறையாக 'ஏர் இந்தியா' போன்ற விமான நிறுவனம் சார்பில் இந்த சர்வீஸ் இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் துவக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.