திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்!

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசுடன் கைகோர்க்கும் விதமாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறத்தில் கிருமி நாசினி தெளிக்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.



திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேவி ஆர் நகர் பகுதியில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தனியார் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் தெருவாரியாக வீடுகள், கடைகள், பஸ்ஸ்டாப் போன்றவற்றின் வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் களப்பணியாளர்களுக்கு கொரோனா கவச உடை, தெளிப்பான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் அடுத்த 11 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும். அதற்கான பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...