மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாச்சேகவுண்டம்பாளையத்திற்கு அரசு பேருந்து சேவை - குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்!

கோவை: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாச்சேகவுண்டம்பாளையத்திற்கு அரசு பேருந்து சேவையை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.


கோவை: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாச்சேகவுண்டம்பாளையத்திற்கு அரசு பேருந்து சேவையை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மாச்சேகவுண்டம் பாளையத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் பேருந்து சேவையை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், கோரிக்கையை பரிசீலித்த அரசு போக்குவரத்து கழகம், மாச்சேகவுண்டம் பாளையத்திற்கு பேருந்து சேவை தொடங்க உத்தரவிடப்பட்டது.



அதன்படி, இன்று காலை மாச்சேகவுண்டம் பாளையத்திலிருந்து காந்திபுரம் வரை அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த விழாவில் மதுக்கரை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் மாச்சேகவுண்டம்பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...