கோவை: கோவை மாவட்டத்தின் புதிய மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி பதவி ஏற்றுக் கொண்டார்.
கோவை: கோவை மாவட்டத்தின் புதிய மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் காவல்துறை, அரசு உயர் அதிகாரிகள் என பலர் மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டன.
அதன்படி, கோவையில் பணியாற்றி வந்த நல்லதம்பிக்கு பதிலாக தேனியில் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த செந்தில் அண்ணா என்பவர் கோவைக்கு புதிய செய்தி தொடர்பு அதிகாரியாக மாற்றம் செய்யப் பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று செந்தில் அண்ணா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய மாவட்ட செய்தி தொடர்பு துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.