கோவை: பொள்ளாச்சியில் இருவேறு இடங்களிலிருந்து, கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சியிலிருந்து, கேரளாவுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகப் புகார் இருந்து வந்தது.
இதையடுத்து தமிழக-கேரள எல்லைப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியிலிருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் பரிசோதனை செய்ததில், ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு காரில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல ஆனைமலை போலீசார், அம்பராம்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, காரில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அஜ்மல் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை காவல் நிலையங்களில் பிடிக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.