கோவை: வால்பாறையில் தையல் கலைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதோடு கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தையற் கலைஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜெகன் கலந்து கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி சிறப்புரையாற்றி னார்.
தொடர்ந்து வால்பாறை உதவி காவல் ஆய்வாளர் பாலாஜி கலந்துகொண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் ஜான்சன் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் சிற்றரசு தலைவராகவும் மாடசாமி பொதுச் செயலாளராகவும் ஜான்சன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.