கோவை: உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக நகராட்சி அலுவலக மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு வாரம் ஆகஸ்டு 1 ம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு சித்த மருத்துவமுகாம் நடைபெற்றது.
முகாமில், நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் நோய் வன்மையை அதிகரிக்கும் நெல்லிக்காய் லேகியம், அமுக்கிரா மாத்திரை, நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆடாதோடை மணப்பாகு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் இலட்சுமிபதிராஜ் தலைமையில், டாக்டர் ஶ்ரீபப்பி, டாக்டர் சாலை கார்த்திகேயன், டாக்டர் சவீதா பங்கேற்று சிகிச்சை வழங்கினர். முகாமில் ஆய்வாளர்கள் செல்வம், ராஜமோகன், மருந்தாளுநர் பெனிலா, கிருஷ்ணக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.