கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

கோவை: கோவை துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதிகளில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்துவந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அந்த இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. புகாரைத் தொடர்ந்து நேற்று 2 இளைஞர்களை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞர்கள் புகார் அளித்த இளைஞர்களை இன்று வீட்டுக்கு சென்று தாக்கியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.



சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கஞ்சாவால் இளைஞர்கள் சீரழிவதாக கூறி கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யக்கோரி கோசங்களை எழுப்பினர்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர். இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...