திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பி.ஏ.பி) மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு, பாசன வசதி பெறுகின்றன.

பி.ஏ.பி தொகுப்பு அணைகளிலில் இருந்து 49.3 கி.மீ., தூரம் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் மூலம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து, பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நான்காம் மண்டல பாசனத்தில் உள்ள 94,068 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்வகையில், விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, இன்று முதல் 135 நாட்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், மொத்தம் 9,500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேலும், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான ஏழு குள பாசனத்தில் 2,786 ஏக்கர் பாசன வசதி பெறும்வகையில், மொத்தம் 700 மில்லியன் கன அடி தண்ணீர் தளி கால்வாய் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் இன்று முதல் வரும் 31.05.2022 வரை திறக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பங்கேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.
இவ்விழாவில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.