பொள்ளாச்சியில் வடமாநில பானிபூரி கடைக்காரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை: பொள்ளாச்சியில் வடமாநில பானிபூரி கடைக்காரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் வடமாநில பானிபூரி கடைக்காரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரங்க சமுத்திரம் பகுதியில் வசிக்கும் கிஷோர் சௌராசியா(32) என்பவர் பத்தரகாளியம்மன் கோவில் வீதி ரயில்வே கேட் அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு 8- மணி அளவில் பானிபூரி கடைக்குக் காளான் சாப்பிட ஆட்டோவில் வந்த பொள்ளாச்சி கோட்டூர் ரோடுபெரியார் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காளான் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட காலனுக்கு காசு தராமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரிடம் பானிபூரி கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் தகாத வார்த்தையில் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, பானிபூரி கடை உரிமையாளர் கிஷோர் சௌராசியா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...