கிணத்துக்கடவு பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு!

கோவை: கிணத்துக்கடவு காளியண்ணன்புதூரில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு காளியண்ணன்புதூரில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் நினைவு கூறும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.



பின்னர், இந்த நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவி ஜனவிகா, தீரன் சின்னமலை குறித்த சாதனைகளையும், வாழ்க்கை நினைவுகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.



இதில் கோவில்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், அதிமுக நிர்வாகிகள் சதீஷ்குமார், சண்முகசுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பிரகாஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...