கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, மின்விளக்கு, சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 139 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (28.07.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 139 மனுக்கள் பெறப்பட்டன.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களில் இடம்பெற்றிருந்தன. மேயரும் ஆணையாளரும் இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்பொழுது பெறப்பட்ட மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேயரும் ஆணையாளரும் அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, நகர்நல அலுவலர் Dr வீ.சி.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர்கள் நர்மதா (மேற்கு), தட்சிணாமூர்த்தி (தெற்கு) ஆகியோர் கலந்துகொண்டனர். செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...