கோவை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... முதியவர் கைது..!

கோவை: கோவை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த முதியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த முதியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை அருகே தனது அக்கா வீட்டிற்கு வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, 70 வயது முதியவர் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனையடுத்து, போலீஸார் அந்த முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். இளம்பெண், தனது அக்கா வீட்டுக்கு அருகே உள்ள 70 வயது முதியவரான முருகன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.

இந்தநிலையில், இளம்பெண்ணின் அக்கா தங்கையைக் காணவில்லை என தேடிப் பார்க்கும் பொழுது, முருகன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளார். அதோடு, முருகனைப் பிடிக்க முயற்சி செய்தபோது முதியவர் தப்பிவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் முருகனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...