பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து..!

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், கட்டடங்கள் என சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.


திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், கட்டடங்கள் என சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் பல்லடம் தாராபுராம் சாலை கள்ளிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநில மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நூற்பாலையில் உள்ள குடோனில் விற்பனைக்காக இரண்டாம் தர கழிவு பஞ்சு மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இன்று வழக்கம் போல நூற்பாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குடோனில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக அங்கு சென்ற பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டையில் தீ மளமளவென பரவியது.



இதனை அடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் நூற்பாலையின் மீது லாரிகள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரமாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...