கோவை: வால்பாறையில் கரடி தாக்கிய குடும்பங்களுக்குக் காவல் துறை ஆய்வாளர் கற்பகம் உணவுப் பொருள்கள் வழங்கி வன விலங்குகளிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வில்லோனி எஸ்டேட் பகுதியில் இரவு 7 மணியளவில் மோகன்ராஜ் என்பவரைக் கரடி தாக்கி கொன்றது.
அவர்கள் வீட்டில் அவரது மனைவி மற்றும் 2 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரை கரடி தாக்கி கொன்றது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், வால்பாறை அருகே ஐயர்பாடி இரண்டாவது பிரிவில் குடியிருக்கும் ஆசீர்வாதம் என்பவரது மகன் வசந்த் பிரபாகர் வீட்டிற்கு நடந்து வரும் வழியில் கரடி தாக்கி படுகாயம் ஏற்படுத்தியது.
அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் அவர்களது பெற்றோர் கோவை மருத்துவமனையில் இருப்பதால் அவர்கள் வீட்டில் இருக்கும் மகள் மற்றும் மனைவி மற்றும் தாயாருக்கு ஆறுதல் கூறும் வண்ணம் வால்பாறை காவல்துறை அதிகாரி கற்பகம் அவர்கள் உணவுப் பொருள்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதி பொதுமக்களை அழைத்து வன விலங்குகளிடமிருந்து எவ்வாறு நாம் பாதுகாப்பாக இருப்பது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வழங்கினார்.
அவசர உதவிக்கு 181 நம்பரைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.