திருப்பூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேர் கைது - 1,100 கிராம் கஞ்சா பறிமுதல்!

கோவை: திருப்பூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் அருகில் உள்ள பூச்சகாடு பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, விமல் என்பவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.



இதையடுத்து உடனடியாக விமல் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த முத்துமாரி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...